Categories: Press-Releases

அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐ.நாவின் வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

[ad_1]

தமிழினப்படுகொலையினை தடுக்கத்தவறிய ஐ.நா பொதுமன்றின் வாயிலில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவேந்தல் கஞ்சி பரிமாறப்பட்டது

NEW YORK, UNITED STATES, May 12, 2022 /EINPresswire.com/ —

மே18 தமிழின அழிப்பினை நினைவேந்தும் தமீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி, நினைவேந்தல் வார நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் உணர்வபூர்வமாக தொடங்கியிருந்ததோடு, அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

போரைத்தடுத்து, உயிர்களை காப்பாற்ற ஐ.நா தவறியது என ஐ.நாவின் உள்ளக அறிக்கையே தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு பரிகார நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு ஐ.நாவுக்கு உண்டென இந்நிகழ்வு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இன்னமும் தமிழர்கள் நிற்கின்றார்கள்’ என தெரிவித்த ஐ.நா ஊடகர், முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்றத்தினை தனது கமராவில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை, மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால் இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது. இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.

போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர்.

இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.

இரத்தம் தோய்ந்த தமது வரலாற்றின் வலிகளை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கடந்தும் பண்பாடாக 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு உள்ளான அ10ர்மேனியர்கள் ‘ஹரிஸ்ஸா’ உணவையும், யூதர்கள் ‘மற்சூ’ உணவையும் கொண்டிருப்பது போல், ஈழத்தமிழர்கள் நாமும், ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யினை எமது அடுத்த தலைமுறையிடம் கடத்தும் ஓர் விடுதலைப் பண்பாடாக இதனை முன்னெடுப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

யூதர்களுக்கு மற்சூ, ஆர்மேனியர்களுக்கு ஹரிஸ்ஸா, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

Link: https://www.einpresswire.com/article/572171103/

“தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி, முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவேந்தல் வாரத்தினை தொடங்குவோம்”

தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி, முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவேந்தல் வாரத்தினை தொடங்குவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த விடுதலைப் பண்பாட்டை அடுத்த தலைமுறையின் கைகளுக்கு கடத்துவோம் என தெரிவித்துள்ளது.

** WATCH: Sri Lanka’s Killing Fields: https://youtu.be/r3yPzyM0KMU

மே12ம் நாள் வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக உலகத் தமிழர்களால் தொடங்குகின்றது.

2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை, மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால் இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது. இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.

போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர்.

இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.

இரத்தம் தோய்ந்த தமது வரலாற்றின் வலிகளை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கடந்தும் பண்பாடாக 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு உள்ளான அ10ர்மேனியர்கள் ‘ஹரிஸ்ஸா’ உணவையும், யூதர்கள் ‘மற்சூ’ உணவையும் கொண்டிருப்பது போல், ஈழத்தமிழர்கள் நாமும், ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யினை எமது அடுத்த தலைமுறையிடம் கடத்தும் ஓர் விடுதலைப் பண்பாடாக இதனை முன்னெடுப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

Mullivaaikkaal Remembrance Week Begins on 12th May – Concludes on Tamil National Mourning Day 18th May: TGTE

Congee (கஞ்சி) will be served at all Mullivaaikkaal Remembrance Week venues in Tamil Homeland and across the globe – In USA at the entrance of UN Head Quarters.

Link: https://www.einpresswire.com/article/572068397/mullivaaikkaal-remembrance-week-begins-on-12th-may-concludes-on-tamil-national-mourning-day-18th-may-tgte

** நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி **

Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்

நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org

இணையத்தள முகவரி: www.tgte-us.org

கீச்சக முகவரி: @TGTE_PMO

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org



[ad_2]

Source link

EIN Presswire

Recent Posts

Share repurchase programme

[ad_1] Nørresundby, 26 April 2024Announcement no. 23/2024 The Board of Directors of RTX has, cf. company announcement no. 20/2023 dated…

3 days ago

Gyroscope Market Size, Share And Growth Analysis For 2024-2033

[ad_1] Gyroscope Global Market Report 2024 – Market Size, Trends, And Global Forecast 2024-2033 The Business Research Company's Gyroscope Global…

3 days ago

Casting Off the Caste System and its Stigma: Empowering the Forgotten Indigenous People of India with Human Rights

[ad_1] ODISHA, India, and LOS ANGELES, Calif., April 25, 2024 (SEND2PRESS NEWSWIRE) — In the 1880s, to call attention to…

3 days ago

Alipay+ Enables Digital Payment of 14 Overseas E-wallets from 9 Countries and Regions in Hong Kong to Support City’s Global Travel Drive

In support of Hong Kong's new mega tourism and commerce drive, Alipay+ now enables users of 14 leading overseas mobile…

3 days ago

Celebrate "Bleach: Brave Souls" Reaching Over 90 Million Downloads Worldwide with "The Future Society Zenith Summons: Cyber" Featuring New Versions of Ulquiorra, Orihime, and Nnoitora

[ad_2] TOKYO, April 26, 2024 /PRNewswire/ -- KLab Inc. announced that its hit 3D action game Bleach: Brave Souls has…

3 days ago

TransAlta Declares Dividends

[ad_1] CALGARY, Alberta, April 24, 2024 (GLOBE NEWSWIRE) -- The Board of Directors of TransAlta Corporation (TSX: TA) (NYSE: TAC)…

4 days ago